பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006-ல் கூகிள் நிறுவனம் வாங்கியது.
பிப்ரவரி 2005 -ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி , ஸ்டீவ் சென் , ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் தொடங்கினர்.சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் படித்தவர் . ஸ்டீவ் கரீம் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இல்லினோயஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். நவம்பர் 2005 ற்கும் எப்ரல் 2006 ற்கும் இடையே 11.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸீகியோயியா கேபிடல் நிறுவம் இதில் முதலீடு செய்தது.
‘மி அட் ஸூ’ என்ற காணொளியே இதில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி. ஜாவேத் கரீம் 2005 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி இரவு 08:27 ற்கு பதிவேற்றம் செய்தார்.