இலங்கை வாழ் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 55,000 ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் வாழும் சாதாரண தர மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு தொடர்பில் ஆய்வொன்றினை சனத்தொகை மற்றும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
குறித்த ஆய்வின் அடிப்படையில் சாதாரண மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவானது 55 ஆயிரம் ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் நகரப் புறங்களில் வாழும் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 77 ஆயிரத்து 337 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை கிராமிய மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 51 ஆயிரத்து 377 ரூபா வரையிலான தொகையாக காணப்படுவதுடன், பெருந்தோட்டப்புற மக்களின் வாழ்க்கைச் செலவு 34 ஆயிரத்து 851 ரூபா வரையிலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.