இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் நான்கு நாடுகளின் இராஜதந்திரிகள் தம்முடன் பேச்சு நடத்தியதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனாவின் தூதுவர்கள், மற்றும் பிரித்தானியா, இந்திய உயர்ஸ்தானிகர்கள் ஆகியோர் தம்முடன் பேச்சு நடத்தியாக அவர் கூறியுள்ளார்.
எனினும் குறித்த பேச்சுவார்த்தைகளில் பேசப்பட்ட விடயம் என்ன என்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தகவல் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.