மனித உரிமைகள் விவகாரத்தில் இதுவரை தாம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்க உள்ளது.
இதற்காக அடுத்த மாதம் ஜெனிவாவுக்கு தூதுக்குழு ஒன்றை அரசாங்கம் அனுப்ப உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள 37 ஆவது அமர்வில் எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் நாள் இலங்கை தொடர்பில் ஆராயப்பட உள்ளது.
போருக்கு பின்னரான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில், இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கை குறித்த தமது அவதானிப்புகள் தொடர்பான எழுத்துமூலமான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.