இலங்கையில் தற்போது அரசியல் நிலைத்தன்மை ஆட்டம் கண்டுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னர் இலங்கை நாடாளுமன்றம் நாளை முதன்முறையாக கூடவுள்ளது.
இந்த நிலையில் நாளைய நாள் அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கத் தரப்பு தோல்வியடைந்ததை தொடர்ந்து, அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் நாளையநாள் கூடுகின்ற கூட்டத்தில் அரசாங்கம் பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் 107 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 96 ஆசனங்களையும் கொண்டுள்ளது.
இந்த இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் அறுதிப் பெரும்பான்மைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.