தன் தனித்துவக்குரலால் தாயகவிடுதலைக்கு வலுச்சேர்த்த பாடகர் சாந்தன் பலதடவைகள் தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர். இந்த உன்னத கலைஞன் ஈழ மண்ணை விட்டு போனாலும் அவரது புகழும் பாடல்களும் என்றும் மங்கா புகழுடன் வீரநடை போடும். தன்னுடைய ஈர்ப்புமிக்ககுரலில் பாடிய எழுச்சிமிகு பாடல்களினூடாக சாந்தன் அவர்கள் அனைத்து உள்ளங்களிலும் காலம்காலமாய் வாழ்ந்துகொண்டிருப்பார்.