முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரத்தில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்முறைக்கு எதிராக இளைஞர்கள் கொழும்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலரி மாளிகை வாயிலையும் முற்றுகையிட்டனர். கண்டி மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள், சொத்துக்கள் என்பவற்றுடன் பள்ளிவாசல்களும் கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளஅதேவேளை கடந்த வாரம் அம்பாறையில் கலவரம் இடம்பெற்றது. அதனையடுத்து கொழும்பு முஸ்லிம் இளைஞர்கள் இரவு 7 மணி தொடக்கம் நள்ளிரவு தாண்டிய நிலையிலும் அலரி மாளிகையின் பின்வாசல் பிரதேசத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டத்தில் குதித்திருந்தனர். இன்று காலை போராட்டக்காரர்களை சந்திக்க தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கியதை அடுத்து, போராட்டக் காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறும் பாதுகாப்புத் தரப்பினர் கேட்டுக் கொண்டனர்.ன.