2013-17-ல் பல்வேறு மட்ட நீதிமன்றங்கள் சுமார் 1.95 லட்சம் ஊழல் வழக்குகளைக் கையாண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது என்று சீன உச்ச நீதிமன்றத்திப் தலைமை நீதிபதி ஸூ கியாங் அளித்த அறிக்கையை சுட்டிக் காட்டில் சீன நாடாளுமன்றம் இந்தத்தகவலை அளித்துள்ளது.
இதில் மாகாண மற்றும் அமைச்சக மட்டத்தில் ஊழல் செய்த 101 முன்னாள் அதிகாரிகள் அடங்குவர்.
அதிபர் ஜின்பிங் பதவியேற்றது முதல் நடந்து வரும் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ராணுவ ஊழலும் அடங்கும்.
கட்சியின் உயர்மட்ட பொலிட்பீரோ உறுப்பினர்களான போ ஸிலாய், ஸூ யாங்காங், குவொ பாக்சியாங், சுன் செங்கய் ஆகியோரும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான ஊழல் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக முன்னர் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் விடுதலை ராணுவத்தின் 100 ஜெனரல்கள், சுமார் 4,000 ஜெனரல் அதிகாரிகள் ஆகியோர் ஊழலுக்காக தண்டனை பெற்றுள்ளனர். ஜின்பிங் தன் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள இத்தகைய செயலைச் செய்து வருகிறார் என்று விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.