தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜெனிவா ரயில் பநிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகிய பேரணி, ஜெனிவா முருகதாசன் திடலில் நிறைவடைந்தது.பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 2011 அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம், அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.