வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் 200 ஏக்கர் காணியை விடுவிக்க கடற்படை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த போதிலும், அவ்வாறு காணிகள் எவையும் விடுவிக்கப்பட மாட்டாது என்று கடற்படை தற்போது தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிறிலங்கா கடற்படை பேச்சாளரை தொடர்பு கொண்டு வினவியபோது, அவ்வாறு 200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்ற தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.
தமது இந்த முகாமிற்காக சுவீகரிக்கப்பட்ட காணியை மீண்டும் விடுவிக்கும் வகையில் எந்த தீர்மானங்களும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த கடற்படை முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், காணியை விடுவிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.