அனைத்துலக தலையீட்டுடன் நல்லதொரு பொறிமுறை தயாரிக்கப்பட்டு இலங்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் குறித்து, ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிராந்திய அரசியல் நலனைக் கருத்திற்கொண்டே இலங்கை தொடர்பில் அனைத்துலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.