கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம், அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவித்து வரும், ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி, கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமானார். இவரின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது.

மனைவியின் இறுதி நிகழ்வுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டார். மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியதைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் கண்கலங்கினர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தந்தையான ஆனந்தசுதாகர் கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பிலேயே இரண்டு பிள்ளைகளும் வாழ்ந்து வந்தனர். தற்போது தந்தையை பிரிந்து தாயை இழந்து குழந்தைகள் இருவரும் வாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது