கிளிநொச்சியை சேர்ந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி, வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச இளைஞர்கள் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோறளைப்பற்று பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் கையெழுத்திப் பெறும் நடவடிக்கையை வாழைச்சேனை பொதுச் சந்தைப் பகுதி மற்றும் சந்திவெளி பொதுச் சந்தைப் பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைச்சேனை மற்றும் சந்திவெளி பொதுச்சந்தை பகுதியில் இடம்பெற்ற கையெழுத்துச் சமரில் பொதுமக்கள், அரச அதிகாரிகள், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டுள்ளனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரின் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக எந்தவித நிபந்தனைகளுமின்றி பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு பகுதிகள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை இவ்வாறு கையெழுத்துக்களைத் திரட்டி உரிய கோரிக்கை அடங்கிய மனுவினை இல்ஙகை சனாதிபதிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் ஏற்பாட்டாளர்கள் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை இலங்கை சனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹா தர்ம குமாரக் குருக்கள் மற்றும் செயலாளர் பிரம்மசிறி மனோ ஐங்கரசர்மா குருக்கள் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டு குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்ததுடன், அவரது கணவரான அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள விடயத்தினை அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் அவரின் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், குறித்த இரண்டு குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நாட்டின் சனாதிபதி தனது அதிகார தத்துவத்தின் அடிப்படையில் ஆனந்த சுதாகரனுக்கு கருனை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இல்ஙகை சனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று வடமாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் 119ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவை தலைவர் சிவஞானம் தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது.
இதன்போது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய சனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை வலியுறுத்தும் விதமாக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு பத்திரம் ஒன்றில் சகல உறுப்பினர்களும் கையெழுத்திட்டதுடன் அதனை