வட தமிழீழம் , கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், பூநகரி – சங்குப்பிட்டி பகுதியில் வைத்து சிறிலங்கா கடற்படையின் உழவு இயந்திரம் மோதி இறந்துள்ளார். சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் மோதியதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையரான 42 வயதுடைய அடைக்கலம் கொன்சலஸ் என்ற முன்னாள் போராராளியே இவ்வாறு பலியாகியுள்ளார். வட தமிழீழம் , யாழ்ப்பாணம் நாவாந்துறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியபோது பூநகரி சங்குப்பிட்டியில் எந்தவிதமான சமிக்ஞைகளும் இன்றி நின்ற கடற்படையின் உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட கம்பியில் மோதி, தடுமாறிய நிலையில் மீண்டும் உழவு இயந்திரத்தில் மோதி பரிதாபகரமாக சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.