யாழ்ப்பாணத்தில் கல்வி அபிவிருத்தியை மீளக் கட்டியெழுப்புவதற்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும் என்று இல்ஙகை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் கல்வி முறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், வட மாகாணத்தின் கல்வியை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல்லை நாட்ட வேண்டுமென கூறியுள்ளார்.
ஒரே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிட முடியும் என்று தன்னால் கூறிவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், போர் இடம்பெறுவதற்கு முன்னதாக வடக்கின் கல்வித்தரம் மிக உயர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் தற்பொழுது வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்