பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றும், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது, பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அதிபரின் இந்தக் கருத்து தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கட்டத்தில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதை அமைச்சர் மங்கள சமரவீர நினைவுபடுத்தியுள்ளார்.
00000000000
4.
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்துள்ளது.
இதையடுத்து சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சனாதிபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவு வெளியிடும் என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தாலும், உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அத்துடன் பிரதமர் பதவியை விட்டு விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை கோருவதற்கு, சிறீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் ஏகமனதாக தீர்மானித்துள்ள நிலையில், பிரதமர் மற்றும் சனாதிபதிக்கும் இடையில் நேற்று இரவு சந்திப்பு ஒன்று நடைபெற்றதுடன், இன்றும் சந்திப்புக்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறான பரபரப்பான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவசரமாக சனாதிபதியை சந்திக்க செல்வது குறித்து பெரிதும் பேசப்படுகின்றது.