அமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றில் நிர்வாணமாக ஆடைகளின்றி வந்த இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அமெரிக்கவின் டென்னிஸி மாகாண போலீஸார் தரப்பில், “டென்னிஸி மாகாணத்திலுள்ள நஷ்வில்லே நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள உணவு விடுதியில் ஆடைகளின்றி நிர்வாணமாக நுழைந்த இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ட்ராவிஸ் ரென்கிங் என்று தெரிய வந்துள்ளது. இவர் கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டவர் ” என்று கூறியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் பயன்படுத்திய துப்பாக்கியை போலீஸார் கைபற்றியுள்ளனர்.
மேலும், இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.