இன்று இரவு அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த், அவரது பயணத்தின் முக்கிய நோக்கிய என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? இது அவருடைய அரசியல் பயணமா? போன்ற பல தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
இரண்டு வாரம் அமெரிக்காவில் தங்கும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைகளை முக்கியமாக மேற்கொள்கிறார். சில வல்லுநர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை ரஜினியின் அரசியல் பயணத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவில் பத்து நாட்கள் தங்கும் ரஜினி, உடல் பரிசோதனைகளையும் செய்துகொள்கிறார். இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிகாந்தை அவருடைய போயஸ் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்த உத்தரவு
ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்த ரஜினிகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். தன்னுடைய அரசியல் அறிவிப்புக்குப் பிறகு தமிழத்தில் உள்ள உள்ள 32 மாவட்டங்களை 38 ஆக பிரித்து அதற்கான மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை நியமித்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.