ஒன்ராறியோவின் Wellington County பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் படுகாயமடைந்த பெண் ஒருவர், உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை 7இல், Guelphற்கும் Rockwoodற்கும் இடைப்பட்ட பகுதியில், நேற்ற மாலை 5.30 அளவில் இந்த விபத்துசம்பவித்துள்ளது.
இரண்டு வாகனங்கள் மோதுண்டதாகவும், இதன்போது படுகாயமந்த Guelph பகுதியைச் சேர்ந்த 71வயது பெண் உயிராபத்தான காயங்களுடன் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், Halton பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் உயிராபத்தற்ற காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்த விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், அது குறித்து தொடர்ச்சியாக விசாரணைகளை மேறகொண்டுவரும் காவல்துறையினர், சம்பவத்தை நேரில் கண்டோர் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.