ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வோசிங்டனில் ஊடகவிலாளரை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும், இதில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாகிஸ்தான் நாட்டுடனான எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிணக்குக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எல்லைப் பகுதியில் இரண்டு நாடுகளின் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதுடன், இரண்டு படையினருக்கும் இடையில் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெறுவது வழமையானதாக காணப்படுகின்றது.