நேற்று இரவு யேர்க் பல்கலைக்கழகப் பகுதியில் ஆண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Jane Street மற்றும் Steeles Avenue West பகுதியில், நேற்று இரவு 8.45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அந்தப் பகுதியில் உள்ள தபால் பொதி வினியோக நிறுவன கட்டிடம் ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துளள போதிலும், சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.