இன்று அதிகாலை வேளையில் ரொரன்ரோ Moss Park பகுதியில் வைத்து கத்திக் குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Queen Street East மற்றும் George Street பகுதியில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து குறித்த அந்த ஆண் ஆபத்தான நிலையிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.