றிச்மண்ட் ஹில் பகுதியில், நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த உந்தருளி ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Leslie Street மற்றும் Greenhill Avenue பகுதியில், நேற்று இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்ததாகவும், விபத்தில் படுகாயமடைந்த 24 வயது உந்துருளிச் சாரதி பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய மற்றைய வாகனத்தின் சாரதிக்கு காயங்கள் எவையும் இல்லை எனவும், அவர் சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், யோர்க் பிராந்திய காவல்துறையின் பாரிய விபத்து குறித்த சிறப்பு விசாரணைப் பிரிவினர் இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பொறுப்பேறறு்க் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை இந்த விபத்தினை நேரில் கண்டோர் அல்லது அது குறித்து மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.