கனேடிய மத்திய பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ள நிலையில், அந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை ஆளும் லிபரல் கட்சி இப்போதே ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பொதுத் தேர்தலை எதிர்நோக்கவுள்ள லிபரல் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் தொடங்கவுள்ளது.
அந்த வகையில் முதலாவது வேட்பாளர் தேர்வு நடவடிக்கை Mississauga-Malton தொகுதியில் அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய பொருளாதார அபிவிரு்ததி அமைச்சருமான நவ்டீப் பயின்ஸ்சினால்(Navdeep Bains) எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் நாள் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், புதன்கிழமை நடைபெறவுள்ள லிபரல் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவு நிகழ்வில் பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் கலந்துகொண்டு, லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவினை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஏனைய தொகுதிகளுக்குமான வேட்பாளர் தெரிவுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக லிபரல் கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.