நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழா இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினராக கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இரா சம்பந்தன் அதில் கலந்துகொள்ளவுள்ள நிலையிலேயே, இருவரும் ஒரே நிகழ்வில் நேருக்கு நேர் கலந்துகொள்ளும் இந்தச் சந்தர்ப்பம் நீண்ட காலத்தின் பின்னர் ஏற்படவுள்ளதாக கூறப்டுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ள நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவதுடன், பலர் மத்தியில் எதிர்பார்ப்புகளையும் தொற்றுவித்துள்ளது.