ஹோல் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், குரோஷியாவின் பொர்னா கொரிக்கிடம் தோல்வியுற்ற 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், நேற்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஸ்பெய்னின் ரபேல் நடாலிடம் தனது முதலிடத்தை இழந்து இரண்டாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், ரொஜர் பெடரரை 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பொர்னா கொரிக் வென்றிருந்தார்.