பிரெஞ்சு கிரான்ட் பிறிக்ஸை, முதலாவதாக ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் முதலிடத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலிலும் முன்னிலையைப் பெற்றுக் கொண்டார்.
நேற்று இடம்பெற்ற இப்பந்தயத்தில், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தனர்.
இப்பந்தயத்தின் முடிவில், சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 145 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஹமில்டன் காணப்படுவதுடன், அவரை விட 14 புள்ளிகள் குறைவாக 131 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பெராரி அணியின் செபஸ்டியன் வெட்டல் காணப்படுகின்றார்.