இந்தியா சென்றுள்ள செசல்ஸ் நாட்டு அதிபர், இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரை இன்று சந்தித்துள்ளார்.
இன்று குடியரசு தலைவரின் மாளிகைக்குச் சென்றுள்ள அவருக்கு முதலில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அத்துடன் அங்கு அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்று கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிகழ்வினை தொடர்ந்து அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனியாகவும் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பேச்சுக்களின் போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும், இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்தும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.