அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம் என்று இலங்கையின் விவசாயத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மீண்டும் போர் வரும் என்றும், தாம் முகாம்களை அகற்றிவருகின்றோம் என்றும் சிலர் கூறி வருகின்றனர் எனவும், ஆனால் தாங்கள் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவும் அகற்றவும் முழு சுதந்திரம் இராணுவத்தினருக்கு உண்டு எனவும், மீண்டும் ஒரு போரை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.