ஏமன் நாட்டில் சவூதி அரேபியாவின் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனின் வடக்கு பகுதியில் இன்று இந்த அதிரடி தாக்குதல் நடாத்தப்பட்டதாக சவூதி கூட்டுப்படை தளபதி துர்கி அல்-மாலிகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலில் 41 கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், அதில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.