காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் நியமிப்பதில் இழுத்தடிப்பு செய்து வந்த கர்நாடக அரசு தற்போது உறுப்பினர்களை அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் உறுப்பினர்களை நியமிக்குமாறு மாநில அரசுக்கக்களுககு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் நியமித்துள்ள போதிலும் கர்நாடக அரசு நியமிக்காது இழுத்தடிப்புச் செய்து வந்தது.
எனினும் அதனைப் புறந்துள்ளி மத்திய அரசு குறித்த அணையத்தை அண்மையில் அறிவித்துள்ள நிலையில் தற்போது கர்நாடக அரசும் தனது உறுப்பினர்களை அறிவித்துள்ளது.