யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை காவலடதுறையினர் தெரிவித்துள்ளனர்.
6 வயதான சிவநேஸ்வரன் றெஜீனா சிறுமியே வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி இன்று பாடசாலைக்குச் சென்று மதியம் வீடு திரும்பிய நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளதுடன், தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
பிற்பகல் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்த நிலையில், விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் பூராகவும் தேடியுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் காணப்பட்ட நிலையில், காவல்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு்ளளனர்.
சிறுமியில் கழுத்து நெரிக்கப்பட்டுக்காணப்பட்டதுடன் நெற்றி பகுதியிலும் காயங்கள் காணப்படுவதாகவும், சிறுமி அணிந்திருந்த தோடும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்று ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.