மாலி நாட்டில் உள்ள புலானி மற்றும் டோகன் ஆகிய இரண்டு பெரும் சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 32 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலி நாட்டில் உள்ள புலானி மற்றும் டோகன் ஆகிய இரண்டு பழம்பெரும் சமூகத்தினருக்கு இடையே நிலம் சார்த்த மோதல் பல காலமாக இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மாலி நாட்டின் மத்திய பகுதியில் உலாவும் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுடன் புலானி இன மக்கள் தொடர்பு வைத்திருப்பதாகவும் டோகன் சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் புலானி மக்கள் வசிக்கும் மோப்தி பகுதியில் உள்ள கவுமகா கிராமத்தை சுற்றிவளைத்த டோகன் இன பாரம்பரிய வேட்டையர்கள், புலானி மக்களை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10இற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் அந்த பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கலவரம் நீடிக்காமல் இருப்பதற்காக அதிக அளவிலான பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலி நாட்டில் நீடித்து வரும் இந்த அலணடமு சமூகத்தாருக்கு இடையேயான மோதலை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.