மிசிசாகாவில் காருடன் சேர்த்து ஒருவர் எரியுண்ட சம்பவம் தொடர்பில், 27 வயது ஆண் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Dixie வீதி மற்றும் Lakeshore வீதிப் பகுதியில் உள்ள சிறிய காடு ஒன்றுக்கு அருகே உள்ள வெற்றுத் திடலில், நேற்று இரவு 6.50 அளவில் குறித்த அந்த கார் எரிந்து கொண்டிருந்த நிலையில், அங்கு பீல் பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, குறித்த அந்தக் கார் முற்றாக தீக்கிரையாகியிருந்ததாகவும், தீயணைப்பு படையினர் மீதமான எரிந்துகெர்ணடிருந்த தீயை அணைத்த வேளையில், அந்த காருக்குள் இருந்து கருகிய நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த விபரங்கள் எவையும் மீட்பு படை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், உயிரிழந்தவர் 71 வயதான நபர் என்பதனை நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
குறித்த இநத சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஏற்கனவே காவல்துறையினர் அறிவித்திருந்த நிலையில், அவர் மிசிசாகாவைச் சேர்நத 27 வயதான ஐனர் காங்திவ்(Ainar Gancthev) என்று தற்போது அடையளம் வெளியிடப்பட்டுள்ளது.
இவர் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டு மற்றும் எரியூட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்ற அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.