நேற்று இரவு மிசிசாகா பகுதியில் நபர் ஒருவருடன் வைத்து கார் ஒன்று எரியூட்டப்ப்டட நிலையில், குறித்த அந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Dixie வீதி மற்றும் Lakeshore வீதிப் பகுதியில் உள்ள சிறிய காடு ஒன்றுக்கு அருகே உள்ள வெற்றுத் திடலில், நேற்று இரவு 6.50 அளவில் குறித்த அந்த கார் எரிந்து கொண்டிருந்த நிலையில், அங்க பீல் பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, குறித்த அந்தக் கார் முற்றாக தீக்கிரையாகியிருந்ததாகவும், தீயணைப்பு படையினர் மீதமான எரிந்துகெர்ணடிருந்த தீயை அணைத்த வேளையில், அந்த காருக்குள் இருந்து கருகிய நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட அந்த சடலத்துக்குரியவரது பெயர் விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், குறித்த இந்தச் சம்பவத்தினை சந்தேகத்திற்கிடமானதாக வகைப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தடன் இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு புலனாய்வாளர்களால் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.