ரொரன்ரோ மத்திய பகுதியில் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற துப்பர்கிச் சூடடுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Dundas street மற்றும் Sherbourne street பகுதியில், இன்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து அங்கு விரைந்ததாகவும், அங்கே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் வேறு எவரும் காயமடையவில்லை என்று கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளை மனித கொலை குறித்த சிறப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவுகளை ஆராய்ந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.