ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லை எனில் தடைகளை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததன் பின்னர், ஈரானை தனிமைபடுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கையாக இந்தியாவுக்கு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விபரம் வெளியிடுகையில், சீனா, இந்தியா உட்பட ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே கூறி விட்டதாகவும், சிறிது சிறிதாக நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஏன் என்ற கேள்வி கேட்காமல் அவர்கள் நிறுத்தி வேண்டும் என்பதை அவர்களுக்கு கூறியுள்ளதாகவும், இவர்களுடடனான இரண்டு தரப்பு சந்திப்பின் போது இதை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளதுடன், இனிமேல் நடைபெறவுள்ள இரண்டு தரப்பு சந்திப்பின் போதும் இதனை வலியுறுத்தவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் தயங்கப் போவதில்லை என்றும், வரத்தக ரீதியாக அந்த நாடுகளை முடக்குவதை தவிர வேறு வழியில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.