வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிடுவது என்பது எமக்கு நன்றாக தெரியும் எனவும், அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும் என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுடன் பல்லாயிரக்காணக்கான மக்கள் இறுதிப் போரில் கொல்லப்பட்டு 10 ஆவது ஆண்டை எட்டவுள்ள நிலையில், அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போதே இதனைத் தெரிவித்துளள முதலமைச்சர், அரசாங்கம் வடமாகாணத்திற்கு இருக்கும் அதிகாரங்களை ஏற்கனவே குறைத்துள்ள நிலையில், தற்போது வட மாகாண கொடி விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் ஏனைய அதிகாரங்களையும் கைப்பற்றுவதற்கான முயற்சியாகும் என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிடுவது என்பது எமக்கு நன்றாக தெரியும் எனவும், ஆகையால் இது தொடர்பில் எவரும் எமக்கு சொல்லித்தர வேண்டிய தேவையில்லை என்றும், இது குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எமக்கே உண்டு என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.