சென்னை-சேலம் இடையே அமைக்கப்படவுள்ள எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கையில் தவறுகள் காணப்படுவதாக விமர்சிக்கப்படுகிறது.
சென்னை-சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை திட்டம், சீனாவின் சியான்(Xian) நகரத்திலுள்ள பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க உதவும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சென்னை-சேலம் இடையில் அமைக்கப்படும் இந்த விரைவுப்பாதைக்கும், சீனாவில் உள்ள சியான் நகரத்திற்கும் என்ன தொடர்பு என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
அத்துடன் அந்த அறிக்கையில் மேலும் பல பொருந்தாத தகவல்கள் இருப்பதாகவும், பல இடங்களில் எழுத்துப்பிழைகளும், ஒரே தகவல் மீண்டும், மீண்டும் பதிவாகியுள்ளமை என்று பல குறைபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.