வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்றில் காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சிறிலங்கா இராணுவ சிப்பாய்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற பேருந்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, குறித்த இராணுவத்தினர் பொதியினுள் மறைத்து எடுத்துச் சென்ற இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அதே பேருந்தில் ஹொறவப்பொத்தானையைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் சந்தேகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது, சிறியளவிலான 6 கஞ்சா பொதிகள் மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.