லெபனான் மற்றும் ஜோர்தான் முதலான நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற இரண்டு இலங்கை பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என்று இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி – ஓப்பநாயக்க – பஹல இலுக்கும்புற பகுதியைச் சேர்ந்த பெருமாள் காளியம்மாள் மற்றும் மொரட்டுவை – கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்த சுமித்ரா நில்மினி பெர்னாண்டோ ஆகியோர் தொடர்பிலேயே எவ்வித தகவல்களும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் நாள் ஜோர்தான் சென்ற பெருமாள் காளியம்மாள் என்ற பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை எனவும், அத்துடன் 2013ஆம் ஆண்டு யூலை மாதம் 9 ஆம் நாள் லெபனான் சென்ற சுமித்ரா நில்மினி குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை என்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த இரண்டு பெண்கள் தொடர்பான தகவல் அறிந்தவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.