தமிழக சட்டப்பேரவையின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாவது நீதிபதியை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வழக்கு தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதின்ற பிரிவு அமர்வு விசாரித்ததுடன், அதன் இரண்டு நீதிபதிகளும் வேறு வேறான தீர்ப்பை வழங்கியிருந்தனர்.
18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற வகையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் தகுதி நீக்க உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் வேறுபட்ட தீர்ப்பை வழகியதை அடுத்து, அந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த மூன்றாது நீதிபதியாக விமாலா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றி உச்ச நீதிமன்றமே விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுள் தங்கதமிழ்ச் செல்வனைத் தவிர ஏனைய 17 பேரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று இது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டதுடன், அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் வேண்டுமானால், வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றலாம் என்றும், விமலாவுக்குப் பதிலாக சத்யநாராயணா விசாரிப்பார் எனவும் நீதிபதிகள் தெரிவித்து்ளளனர்.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பு தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.