இன்று அதிகாலை வேளையில் Yorkdale Mall பகுதியில் வாகத்தினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Dufferin Street மற்றும் Yorkdale வீதிப் பகுதியில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அந்த பாதசாரியை மோதிய வாகனம், சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தினை அடுத்து விசாரணை நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்ட போதிலும், சில மணி நேரங்களின் பின்னர் அவை திறந்து விடப்பட்டுள்ளன.