மும்பை நகரில் கட்டிடம் மீது சிறிய இரக வானூர்தி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்ற பிற்பகல் 1.30 மணி அளவில் மும்பையின் மையப்பகுதியான காட்கோபர் பகுதியில் சர்வோதயா நகரில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் மீது அந்த வானூர்தி மோதி விழுந்து விபத்துக்குள்ளானது.
வானூர்தி மோதிய வேகத்தில் உடைந்து சிதறி, தீப்பற்றியதாகவும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.