கனடாவில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குழந்தைகள், பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வழங்கப்படும் உணவை நம்பியே வாழ்வதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் சில பகுதியில் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவீனம் மிகவும் அதிகரித்துளள நிலையில், ஏறத்தாள ஏழு இலட்சத்து 76 ஆயிரம் சிறுவர்கள் இவ்வாறான பராமரிப்பு நிலைய உணவுகளை நம்பியே இருப்பதாக கூறப்படுகிறது.
கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு மையம் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வுகளின் முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டு்ளள நிலையில், அந்த அறிக்கையிலேயே இவ்வாறான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக பாடசாலைக்குச் செல்லும் பருவத்தில் உள்ள மாணவர்களில் 44 சதவீதத்தினர் இவ்வாறான சிறுவர்கள் பராமரிப்பு நிலைய உணவுகளை நம்பியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அங்கீகாரம் அளிக்கப்படாத சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் நாட்டில் பெருமளவில் உள்ள நிலையில், அவற்றுக்குச் செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை இதன்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவானது கனடாவின் சிறுவர்கள் பராமரிப்பு நிலைப்பாட்டின் மறு பக்கத்தைஎடுத்துக் காட்டுவதாக உள்ளது எனவும் கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரொரன்ரொவைப் பொறுத்தவரையில், Yonge Streetஇல் இருந்து நெடுஞ்சாலை 401 வரையிலான பகுதிகளிலும், அவற்றை அண்டிய பகுதிகளிலுமே அதிக அளவில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் நிறைந்து காணப்படுவதாகவும், அதற்று அப்பாற்பட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.