யாழ்ப்பாணம் மானிப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த குழு ஒன்று, அங்கிருந்த பெண் ஒருவரைச் சராமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, அவரிடமிருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துக்குக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இன்று முற்பகல் வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதனை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்துக்கு மானிப்பாயில் உள்ள காவல்துறையினர் செனறிருந்ததாகவும் அறிய முடிகியது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, களவுக்குச் சென்றவர்களே பெண்ணை வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீட்டுக்குப் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தி, ஆவாக் கழுவினர் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
ஆவாக்குழுவுடன் தொடர்புடைய தனு ரொக் என்பவரைத் தேடிச் சென்றே இந்தத் தாக்குதலை நடாத்தப்பட்டு்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.