ஈராக் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 12 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழ்க்கிழமை அவர்களுக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முற்றிலுமாக இல்லாது செய்யப்பட்ட பின்னர் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய கிட்டத்தட்ட 20,000 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள வருகின்றனர்.
குறிப்பாக கொலைவெறி தாக்குதல்களில் தொடர்புடையை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீதான வழக்குகளின் விசாரணையை விரைவுப்படுத்துமாறும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட்டு கொல்லுமாறும் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே நேற்றைய நாள் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை ஈராக் சிறைகளில் 100 வெளிநாட்டு பெண்கள் உள்பட சுமார் 300 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.