அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரும் பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரிக்கும் டிரம்பின் கொள்கையை எதிர்த்து அமெரிக்காவில் இன்றும் மாபெரும் பேரணி நடாத்தப்பட்டுள்ளது.
அதிபரின் வெள்ளை மாளிகையை நோக்கிச் பேரணியாக சென்றுள்ள ஆயிரக்கணக்கானோர் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
இது தவிர அமெரிக்காவின் வேறு பல பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் இதே காரணத்திற்காக போராட்டம் நடாத்திய 600இற்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.