யாழ்ப்பாணம் – ராமநாதன் வீதியில் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் வீட்டின் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தனுரொக் குழு உறுப்பினர்கள் சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அந்த வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முகத்தை மூடியிருந்த 4 பேர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் உநதுருளிகள் இரண்டில் வந்ததாகவும், அவர்கள் வீட்டின் ஜன்னல் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்து அழித்துள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாக்குதலுக்குள்ளான வீட்டு உரிமையாளரின் ஒரு மகன் ஆவா குழுவுடன் தொடர்புப்பட்டு செயற்படுவதனால் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் பிரதேசத்தில் இயங்கும் தனுரொக் எனப்படும் குழு உறுப்பினரின் வீட்டிற்கு கடந்த 28ஆம் நாள் அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஆவா குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.