இன்று அதிகாலை வேளையில் ஈஸ்ட் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Danforth avenue மற்றும் Greenwood avenue பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Danforth Avenue நோக்கி பயணித்த ரொரன்ரோ போக்குவரத்துக் கழக பேரூந்தில் இருவருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், Danforth avenue மற்றும் Greenwood avenue பகுதியில் பெரூந்தில் இருந்து இறங்கிய இருவரும் மோதிக்கெர்ணட போது, ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து வி்டடதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் ரொரன்ரோவைச் சேர்ந்த 29 வயதான மத்தியூ லிட்ஸ்டர்(Matthew Lidster) என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் குறித்த தகவல்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர், கொல்லப்பட்டவரின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் நாளை செவ்வாய்ககிழமை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த அந்த பேரூந்தில் பயணித்தோர், அல்லது இந்த சம்பவத்தை நேரில் கண்டோர், அது குறித்து மேலதிக தகவல் அறிந்தோர் தமமைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்தறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.